துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க கூடாது என மிரட்டல்...!!! - ஆர்.என் ரவி
Threatening not to participate ViceChancellors conference RN Ravi
தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார்.

மேலும், உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது.இதில், ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி 'ஜெகதீப் தன்கர்' பங்கேற்றார்.
இந்நிலையில் துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் புகார் தெரிவித்தார்.
மேலும், துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க கூடாது என சிறப்பு குழு வைத்து மிரட்டி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி, இதில் ஆர்.என். ரவி தெரிவித்ததாவது, 'பல பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த மாநாட்டை நடத்துகிறேன்' எனத் தெரிவித்தார்.
இது தற்போது மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Threatening not to participate ViceChancellors conference RN Ravi