இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார் - ஆளுநர் ஆர்.என்.ரவி.!
tn assembly 2022
தமிழகத்தில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்திலேயே தமிழக சட்டப்பேரவை கூடும்போது ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு முதல் சட்டபேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றி வருகிறார்..
காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. முதலில் தமிழ் தாய் வாழ்த்து படப்பட்டதும், பிறகு ஆளுநர் ஆங்கிலத்தில் ஆர்.என்.ரவி உரையாற்றி வருகிறார்.
அதில், இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கொரோனா 2 வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகள். முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது" என்று ஆளுநர் ரவி அவர்கள் உரையாற்றியுள்ளார்.