#BREAKING || ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.! சற்றுமுன் சபாநாயகர் அப்பாவு அதிரடி அறிவிப்பு.!
tn assembly 2022 April 6
தமிழக சட்டப்பேரவை வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி முதல், மே மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று, சபாநாயகர் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை தாக்கல், அதன் மீதான விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம் சபாநாயகர் நடைபெற்றது. இந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில், எத்தனை நாட்களுக்கு துறை ரீதியான மானிய கோரிக்கை, விவாதம் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இதில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி, ஆளும் கட்சி, மற்ற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், ஏப்ரல் 6-முதல் தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை தாக்கல், அதன் மீதான விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் நீர்வளத்துறை சம்பந்தமாக மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மறுநாள் ஊரக, நகராட்சி மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
ஏப்ரல் 8ஆம் தேதி கூட்டுறவுத் துறை மற்றும் உணவுத்துறை, ஏப்ரல் 9 ,10 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 11ஆம் தேதி உயர் கல்வி, பள்ளிக் கல்வி ஆகிய மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.