ஆளுநர் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக அரசின் வரலாற்று வெற்றி - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
TN Assembly CM MK Stalin TN Governor Supreme Court
மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. மாநில ஆளுநர்கள் தங்களது விருப்பப்படி செயல்பட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கினர்.
இதன் மூலம், பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்ட திருத்த மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் உள்ளிட்ட 10 மசோதாக்களும் தற்போது சட்டமாக அமலுக்கு வந்துள்ளன.
நீதிமன்றம் மேலும், மாநில அரசின் பணியில் ஆளுநர் தலையீடு செய்வது முறையல்ல என்றும், அவர்கள் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தது.
இந்த தீர்ப்புக்குப் பின்னர், சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.
இது தமிழகத்தின் மட்டும் அல்லாமல் அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றியாகும் என்றும், மாநில சுயாட்சி மற்றும் மத்திய கூட்டாட்சியின் மூலதத்துவங்களை உறுதிப்படுத்தும் தீர்ப்பாக இது அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
English Summary
TN Assembly CM MK Stalin TN Governor Supreme Court