மீண்டும் கூடும் தமிழக சட்டப்பேரவை.. வெளியாகப்போகும் அறிவிப்புகள்.!!
tn assembly reconvenes
தமிழக சட்டமன்றம் கடந்த மாதம் 18 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2022-2023 ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடத்துவதற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று மீண்டும் கூடுகிறது. முதல் நாளில் நீர்வளத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் வாதங்கள் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கும்.
முதலில் கேள்வி நேரம். அதன் பிறகு நீர்வளத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்கும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுவார். நிறைவாக நீர்வளத் துறை சார்பாக புதிய அறிவிப்புகள் வெளியாகும்.