மோசடி வழக்கு: ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்குக்கு ஆளுநர் ஒப்புதல்!
TN Governor Approve ADMK Rajendra balaji case
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, ராஜேந்திர பாலாஜி சார்பில் வழக்குரைஞர் ஏ.வேலன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், குற்றப்பத்திரிகையை ஆங்கிலமாக மொழிபெயர்த்து இரு வாரங்களுக்குள் ஆளுநருக்கு அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்தநிலையில், வழக்கு தொடர அனுமதிக்காக தமிழ்நாடு அரசு அனுப்பிய கோரிக்கையை மாநில ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்கும் வகையில் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் அடிப்படையில், ஓரிரு நாட்களில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
TN Governor Approve ADMK Rajendra balaji case