தஞ்சையில் எலி மருந்து, நெல்லையில் புற்றுநோய், கோவையில் ரசாயன சாணம்., வெளியான அதிரடி உத்தரவு.!
tn suicide case issue feb
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், புற்று நோய், காசநோய் போன்ற இணை நோய்களை கட்டுப்படுத்துவதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, அனைத்து மாவட்ட மருத்துவமனை முதல்வர்கள், இயக்குனர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய நலவாழ்வு குழுமம் சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இணை நோய் பாதிப்பை கட்டுப்படுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அனைத்து மாவட்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு, இயக்குனர்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த ஆலோசனை, கடந்த சில தினங்களாக கொரோனா நோய் பரவல் குறைந்து வரும் நிலையில், மற்ற இணை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய், காசநோய், தற்கொலை, இதய கோளாறு, குழந்தைகளுக்கான இணை நோய்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவது குறித்து விவாதம், ஆலோசனை செய்யப்பட்டது. இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக நெல்லை மற்றும் நெல்லை சுற்றியிருக்கும் மாவட்டங்களில் மார்பக புற்றுநோயானது அதிகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தஞ்சை மற்றும் தஞ்சை சுற்றியுள்ள மாவட்டங்களில் எலி மருந்துகளை உட்கொண்டு தற்கொலை செய்யக் கூடிய நிகழ்வுகள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. அதற்கு தேவையான மனநல ஆலோசனைகள் மற்றும் அதனை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இதேபோன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருக்கக் கூடிய பிரச்சனைகள் குறித்தும் கருத்துக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ரசாயனத்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இது குறித்து மனநல ஆலோசனை மற்றும் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
tn suicide case issue feb