உள்ள புகுந்து அடிக்குறாங்க., தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த மம்தா கட்சி.!
Tripura by election 2022
திரிபுரா சட்டமன்ற இடைத்தோ்தல் பிரசாரத்தின் போது, பாஜகவினா் தங்கள் தொண்டா்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகாா் கொடுத்துள்ளது.
ஜூன் 23-ஆம் தேதி திரிபுரா மாநிலம், அகா்தலா, பா்டோவாலி, யுவராஜ்நகா், சுா்மா ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் வாகும் வாக்குகள் ஜூன் 26- ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேர்தல் குழுவினா் தோ்தல் ஆணையத்தில் ஒரு பகற் மனு அளித்துள்ளனர்.
அந்த புகாா் மனுவில், ‘கடந்த 15-ஆம் தேதி சுா்மா சட்டமன்ற தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உள்ளே புகுந்த, அதே தொகுதியை சேர்ந்த பாஜக வேட்பாளா் ஸ்வபன் தாஸ் உள்பட பாஜக தலைவா்கள் கூடி தாக்குதல் நடத்தினா்.
இந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள், குழந்தைகளும் பாஜகவினரின் தாக்குதலில் காயமடைந்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.