கருணாநிதியின் "அந்த" கதையை வெளியில் சொன்னால் தலைகாட்ட முடியாது - முக ஸ்டாலினை எச்சரிக்கும் டிடிவி தினகரன்!
TTV Dhinakaran Condemn to DMK Anbarasan And MK Stalin
காஞ்சிபுரம் அருகே திமுக இளைஞரணி சார்பாக உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ அன்பரசன் பேசுகையில், எம்ஜிஆர் உடன் ஜெயலலிதாவை தவறாக இணைத்து ஒரு வார்த்தையை பயன்படுத்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமைச்சர் தா.மோ அன்பரசன் பேச்சுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்யுதுகுறிப்பில், "நாடுபோற்றும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்படக் கூடிய தலைவர்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மற்றும் இதயதெய்வம் அம்மா அவர்கள் குறித்து திமுக அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் தரக்குறைவான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
மறைந்த திமுக தலைவர் திரு. கருணாநிதி அவர்கள் குறித்து மறைந்த திரு. நாஞ்சில் மனோகரன் அவர்கள் எழுதிய “கருவின் குற்றம்” என்ற கவிதை குறித்தும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய “வனவாசம்” குறித்தும் இதயதெய்வம் அம்மா அவர்களின் தொண்டர்கள் பேச ஆரம்பித்தால் தா.மோ.அன்பரசன் போன்ற திமுகவினர்களில் ஒருவர் கூட வெளியில் தலைகாட்ட முடியாத சூழல் ஏற்படக்கூடும்.
எனவே, தமிழக மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாழ்ந்து மறைந்த தலைவர்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் திமுகவினரை பேச விட்டு ரசிக்கும் கீழ்த்தரமான செயல்களை அடியோடு நிறுத்துவதோடு, இதுபோன்ற தரக்குறைவான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
TTV Dhinakaran Condemn to DMK Anbarasan And MK Stalin