பிரபல அரசியல்கட்சியின் மாநில தலைவரின் தயார் மறைவு.! டிடிவி தினகரன், சீமான் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


SDPI கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், நெல்லை முபாரக் அவர்களின் தாயார் ஷரிஃபா பீவி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

"SDPI கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், நண்பர் திரு.நெல்லை முபாரக் அவர்களின் அன்பு தாயார் ஷரிஃபா பீவி அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். 

தாயாரை இழந்துவாடும் திரு.முபாரக் அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இதேபோல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் அன்புச்சகோதரர் முபாரக் அவர்களுடைய தாயார் ஷரிஃபா பீவி அம்மையார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். 

பெற்றெடுத்து பேணி வளர்த்த அன்னையின் இறப்புச்செய்தி கிடைத்த பின்னும், மனந்தளராது, ஆளுநரைத் திரும்பபெறக்கோரி சென்னையில் SDPI இன்று முன்னெடுத்த பேரணியில் பங்கெடுத்த சகோதரர் முபாரக்கின் நெஞ்சுரமிக்க பொதுவாழ்வு போற்றுதற்குரியது. 

அன்பு அன்னையின் மறைவால் துயருற்றுள்ள தம்பி முபாரக்கிற்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்" என்று சீமான் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ttv dhinakaran Seeman Mourning news


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->