அரைகுறையாக பார்வையிட்ட  அமைச்சர்கள் குழு - கூடுதல் இழப்பீடு கோரும் டிடிவி டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த  நெற்பயிர்களுக்கு நிபந்தனைக்குட்பட்டு ஏக்கருக்கு ரூ.௮௦௦௦ (ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம்), பயறு வகைகளுக்கு ரூ.1200 இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நெல்லுக்கான இழப்பீடு அதன் உரச் செலவுகளுக்கும், பயறுக்கான இழப்பீடு விதை செலவுகளுக்கும் கூட அரசின் இந்த இழப்பீடு போதாது. 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு பாமக தலைவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த மூன்று லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்கள் எதிர்பாராமல் பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர் ஒரே நாளில் அரைகுறையாக பார்வையிட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருக்கின்றனர். 33 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் சேதத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என திமுக அரசு கூறியுள்ளது.

உரிய மதிப்பீடு செய்யாமல் இழப்பீடு தொகையை அறிவித்திருப்பது ஏற்கதக்கதல்ல. ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனும் விவசாயிகள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்" என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dinakaran say about paddy farmers relief fund 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->