தவெக - அதிமுக கூட்டணி உறுதி?...சீக்ரெட்டை உடைத்த எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக  தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகளுக்கு பின்னர் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான  எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்தூக்கல் என்றும், சென்னையில் உள்ள விளையாட்டு திடல்களை தனியார்மயமாக்கும் முடிவிற்கு கண்டத்தை தெரிவித்து கொள்கிறேன் என்றும், அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கும் என்று கூறிய அவர்,  தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்றும், விஜய் தனது கருத்தை கூறியிருப்பது அவரது சுதந்திரம் என்றும், தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில், விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கும்போது பேசுவது சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கொள்கையே கிடையாது என்றும்,  திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக ஒப்பந்தம் உள்ளதாக அனைவரும் பேசத்தொடங்கி விட்டதாக விமர்சித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tvk aiadmk alliance confirmed edappadi palaniswami broke the secret


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->