உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம் - தவெக தலைவர் விஜய்!
TVK Vijay Periyar
பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பனையூரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் பெரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவரின் செய்தி குறிப்பில், "சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.