த.வெ.க கட்சியின் எக்ஸ் தளத்தின் முகப்பு படம் மாற்றம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ந்தேதி தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப்பாடலை அறிமுகப்படுத்தினார். 

பின்னர் கட்சியின் முதல் மாநாடு நடத்துவது தொடர்பாகவும் விஜய் சில பிரச்சினைகளை எதிர்கொண்டார். பல இடங்களில் மாநாட்டுக்காக இடம் பார்த்து சரியான இடம் அமையாத நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் அடுத்த மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்று விஜய் அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தின் முகப்பு படம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நெற்றியில் பொட்டு வைத்து சிரித்த முகத்துடன் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் முகப்பு படமாக வைக்கப்பட்டிருந்தது. 

தற்போது பொட்டு இல்லாமல் விஜய் கையெடுத்து கும்பிடுவது போன்ற புகைப்படம் முகப்பு படமாக மாற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது, பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது உள்ளிட்டவை பேசுபொருளான நிலையில், தற்போது பொட்டு வைத்த புகைப்படம் மாற்றப்பட்டு இருப்பது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tvk vijay x profile picture change


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->