யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.!! நடிகர் விஜய்யின் பேச்சுக்கு உதயநிதி ரியாக்ஷன்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அப்போது விழாவில் பேசிய நடிகர் விஜய் "நாளைய வாக்காளர்கள் நீங்கள் தான். அடுத்தடுத்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க போகிறீர்கள்.

நம் விரலை வைத்து நமது கண்ணையே குத்திக் கொள்வதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அதுதான் இப்பொழுது நிகழ்ந்து வருகிறது. ஒரு ஒட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்றால் ஒருவர் 15 கோடி செலவு செய்தால் அதற்கு முன் அவர்கள் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள் என்று சித்தித்து பாருங்கள்" என மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

விஜய்யின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினர், அரசியல் பிரமுகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை அறிவாலயத்தில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர் "ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்று நடிகர் விஜய் நல்லதை தானே சொல்லி இருக்கிறார். அதில் உங்களுக்கு எதுவும் பிரச்சனை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் அரசியலுக்கு வரவேண்டும், அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை" என தெரிவித்தார்.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்ற உதயநிதி கூறிய கருத்து விஜயின் அரசியல் ஆசையை மறைமுகமாக புரிந்து கொண்ட பதிலாக தெரிகிறது. விஜய் அரசியலுக்கு வந்தால் அடுத்த பரபரப்பு தொற்றிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udayanidhi reaction to actor vijay speech about politics


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->