இந்தி எந்த வடிவில் வந்தாலும்.. எங்களுடைய பதில் 'இந்தி தெரியாது போடா' - உதயநிதி ஸ்டாலின்.!
Udhayanithi Stalin speech in hindhi Imposition
மத்தியில் ஆளும் பாஜகவின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தியை திணித்து வருவதாக ஹிந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகள் குழு மத்திய கல்வி நிலையங்களில் இந்திய கட்டாயமாக்கப்படுவது குறித்து பரிந்துரை செய்து வருகின்றன.
இந்த நிலையில் மத்திய பாஜக அரசு கையில் எடுத்திருக்கும் இந்து திணிப்பை ஹிந்தி பேசாத அந்தந்த மொழி மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது ; 'இந்தி எந்த வடிவில் வந்தாலும் எங்களுடைய பதில் ஹிந்தி தெரியாது போடா என்பது தான். ஹிந்தி தெரியாது போடா என உங்களிடம் சொல்லிக் கொண்டுதான் இருப்போம். மீண்டும் இந்தியை திணிக்க முயன்றால் டெல்லியில் போராட்டம் நடத்துவோம்.
கடந்த 2010 தேர்தலில் உங்களை எப்படி விரட்டினோமோ 2024 தேர்தலிலும் விரட்டி அடிப்போம். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேற்ற இங்கு ஆட்சியில் இருப்பது எடப்பாடி பழனிச்சாமி அல்ல. இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி' என கூறியுள்ளார்.
English Summary
Udhayanithi Stalin speech in hindhi Imposition