#BigBreaking || ரஷ்ய வீரர்கள் 6000 பேர் கொல்லப்பட்டனர்., சற்றுமுன் வெளியான அதிர்ச்சி செய்தி.!
ukraine say russian 6000 killed
உக்ரைன்-ரஷ்ய போர் ஏழாவது நாளாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் கெர்சன் நகரை கைப்பற்றி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் முக்கியமாக காரைநகரில் ரஷ்ய ராணுவம் உச்சகட்ட போர் தொடுத்துள்ளது. உலக நாடுகள் ரஷ்ய ராணுவம் போரை கைவிட வேண்டும் என்று தெரிவித்து வந்த போதிலும், ரஷ்ய நாட்டின் மீது பல்வேறு தடைகளை விதித்து வந்த போதிலும், ரஷ்ய ராணுவம் தொடர்ந்து பின்வாங்காமல் தீவிர தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், மருத்துவமனை மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதாகவும் உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய படை தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உக்ரைன் அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 6 நாட்களாக நடைபெற்ற போரில் உக்ரைன் ராணுவ வீரர்களின் தாக்குதலில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 6 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தங்கள் தரப்பில் உயிர் சேதத்தை தவிர்க்க, வான்வெளி தாக்குதலை நடத்தி வருவதாகவும், ரஷ்யப் படைகளின் எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம் என்றும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலுக்கு உரிய பதிலடி நாங்கள் கொடுத்து வருகிறோம் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
English Summary
ukraine say russian 6000 killed