வெளியான கருத்து கணிப்பு.! கதறலில் காங்கிரஸ்., கொந்தளிப்பில் அகிலேஷ் யாதவ்.!
uttar pradesh election 2022 samajwadi
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று, தேர்தல் ஆணையத்துக்கு சமாஜ்வாதி கட்சி கடிதம் எழுதி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி முதல் மார்ச் மாதம் வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்து யார் ஆட்சி அமையும் என்பது தொடர்பாக 7 முன்னணி ஊடகங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இந்த கருத்துக் கணிப்புகளின் படி சராசரியாக பாஜக கூட்டணி 235 முதல் 250 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதே சமயத்தில் சமாஜ்வாதிக் கூட்டணி 137 தொகுதி முதல் 147 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் என்றும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி 7 முதல் 10 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 3 முதல் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற வெற்றி பெறலாம் என்று அந்த கருத்து கணிப்பு சொல்கிறது.
இந்த கருத்துக் கணிப்புகளின் முடிவால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ள சமாஜ்வாதி கட்சி, உத்தரபிரதேச மாநிலத்தில் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து பாஜக தரப்பில் தெரிவிக்கையில், "தேர்தல் தோல்வி பயம் வந்து விட்டதால், அகிலேஷ் யாதவ் விரக்தியின் உச்சத்தில் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை பாஜக 312 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
uttar pradesh election 2022 samajwadi