சூப்பர்!!!வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பதவி...! - சீமான் - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பலக் குற்றங்கள் சுமத்திவரும் நிலையில், அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் பலர் அக்கட்சியிலிருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

இதன் நடுவே கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகள் சீமான் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வேறு யாருமில்லை,மறைந்த சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி. இவர் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சியில் அவர் இணைந்தார்.

உடனடியாக அவருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளராக களமிறக்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த முடிவு அரசியல் ஆர்வாளர்களிடையும், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகளிடமும் பெரும் பேசுபொருளாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Veerappans daughter Vidya Rani gets an important position in Naam Tamilar Party Seeman


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->