விஜயகாந்துக்கு என்ன ஆனது? இந்த முறையும் ஏன்? சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக வாக்களித்த வரவில்லை என்று, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை மாநகராட்சி தேர்தலில், சென்னை சாலிகிராமம் காவிரி உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். பிரேமலதா விஜயகாந்த் உடன் அவரின் இரண்டு மகன்களும் வாக்களிக்க வந்தனர். 

கடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக தேமுதிகவின் நிறுவன தலைவர் விஜயகாந்த் வரவில்லை. இந்த முறையும் விஜயகாந்த் வாக்கு செலுத்துவதற்கு வரவில்லை. 

இது குறித்து செய்தியாளர்கள் பிரேமலதா விஜயகாந்த் இடம் கேள்வி எழுப்பிய போது, அவர் தெரிவித்ததாவது,

"மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் வாக்கு செலுத்த வரவில்லை. அவருக்கு தோற்று பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற மருத்துவர்களின் ஆலோசனைபடி, அவர் வாக்களித்து வரவில்லை" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருப்பதாகவும், மக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக வாக்களிக்க வர வேண்டும் என்றும், தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும், யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது, எனவே மக்கள் தங்களது ஜனநாயக கடமை வாக்களிப்பை உடனே வந்து செலுத்தவேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth this time also no vote


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->