விருதுநகர் பாலியல் சம்பவம்.. சிபிசிஐடிக்கு மாற்றம்.. முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதங்கள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர் மற்றும் முதலமைச்சர் பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். வழக்கை முறையாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர் கதையாக உள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி தேவை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதையடுத்து, இது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கி தரப்படும். பாலியல் குற்ற வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன்.

விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  விருதுநகர் பாலியல் குற்ற சம்பவத்தில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். விருதுநகர் பாலியல் குற்ற சம்பவம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி, வண்ணாரப்பேட்டை பாலியல் சம்பவங்கள் போலல்லாமல், விருதுநகர் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு விரைந்து தண்டனை பெற்று தரப்படும் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Gang Rape case Transferred to CBCID


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->