#BigBreaking || திருடு போன விருத்தாசலம் விருத்தாம்பிகை சன்னதி கோபுரத்தின் 3 கலசங்கள் பெரியார் நகரில் கண்டுபிடிப்பு.! ஒருவர் கைது.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம்,  விருத்தாசலம் விருத்தாம்பிகை அம்மன் சன்னதி கோபுரத்தில் 3 கலசங்கள் வைக்கப்பட்டு இருந்தன. 

சுமார் 3 அடி உயரம் கொண்ட இந்த கலசங்களில் தலா 100 கிராம் என 300 கிராம் தங்கமுலாம் பூசப்பட்டு இருந்தது. 

கடந்த இரு தினங்களுக்கு முன் வழக்கமான பூஜைகள் முடிந்தவுடன் சிவாச்சாரியர்கள் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.

பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த போது விருத்தாம்பிகை அம்மன் சன்னதி கோபுரத்தில் 3 கலசங்கள் திருடு போனது தெரியவந்தது.

இந்நிலையில், விருத்தாம்பிகை அம்மன் சன்னதி கோபுர கலசங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போன கோவில் கலசங்கள் தற்போது பெரியார் நகரில் உள்ள பாழடைந்த வீட்டிலிருந்து மூன்று கோபுர கலசங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இது சம்பந்தமாக ஒருவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viruthachalam temple kalasam found


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->