இந்தியாவிற்கு எப்பொழுது இஸ்லாம் பிரதமர்! தி காஷ்மீர் பைல்ஸ் இயக்குனரின் நச் பதில்! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தின் புதிய பிரதமராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்றைய தினம் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில் இங்கிலாந்தின் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு ஹிந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதை போன்று இந்தியாவில் சிறுபான்மையின பிரதமர் வர முடியுமா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் பரவலாக நிலவி வருகிறது.

இதைப் பற்றி பத்திரிக்கையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்தியா எப்போது ஒரு முஸ்லிமை பிரதமராக ஏற்றுக்கொள்ள தயாராகும்" என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தி காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி பதில் அளித்துள்ளார். அவர் அளித்த பதிலில் "இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் கபீர் என்ற வார்த்தையை தடை செய்யும் பொழுது, நிபந்தனைகள் இன்றி இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக பேசும் பொழுது, காஷ்மீர் இந்தியாவில் ஒரு பகுதி என்று ஏற்றுக்கொண்டு, தங்களை பாரத நாட்டைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு, அதே உணர்வுடன் அர்ப்பணிப்புடன் "பாரத் மாதா கி ஜெய்", "வந்தே மாதரம்" என சொல்லும்பொழுது, சிறுபான்மையினர் இந்தியாவின் பிரதமராவது நடக்கும், நீங்கள் தயாரா? என கேள்வி எழுப்பி உள்ளார். இவருடைய பதில் தற்பொழுது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vivek Agnihotri debate on Muslim Indian prime minister


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->