வக்ஃபு சட்டம்: போராட்டத்தை அறிவித்த சீமான்!
Waqf law NTK Seeman protest announce
நாம் தமிழர் கட்சி விடுத்துள்ள அறிவிப்பில், "இஸ்லாமியப் பெருமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி வலுக்கட்டாயமாக இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரியச் சட்டத்திருத்த முன்வரைவினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 13-04-2024 அன்று காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்குமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.

ஒருங்கிணைந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் சார்பாக சென்னை-எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு திடல் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில் மேற்குறிப்பிட்டுள்ள தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
English Summary
Waqf law NTK Seeman protest announce