ஹா ஹா நக்கலான பதில் !!! யாருடன் கூட்டணி? டிரம்புடன் கூட்டணி வைக்கலாம்னு நினைக்கிறேன்...!!! - சீமான்
Who will you ally with I think we can ally with Trump Seeman
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று வக்பு சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது தெரிவித்ததாவது,"தமிழக பா.ஜ.க.வில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டது அந்த கட்சி சார்ந்த விஷயமாகும்.
அதில் கருத்து தெரிவிக்கக்கூடாது.சட்டசபை தேர்தல் நிலைப்பாடு பற்றி கேட்டுள்ளீர்கள். 40 முனை இருந்தாலும் என் முனைதான் கூர் முனையாகும். பண பலத்தோடு அவர்கள் நிற்கிறார்கள்.
நான் மக்களோடு நிற்கிறேன்.பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. அடி பணிந்துள்ளதா? என்று கேட்கிறீர்கள்? எல்லா விஷயத்திலும் கருத்து சொல்வது கண்ணியமாகவும், நாகரிகமாகவும் இருக்காது.
யாருடன் கூட்டணி? யாருடன் கூட்டணி என திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். டிரம்புடன் கூட்டணி வைக்கலாம் என்று நினைக்கிறேன். சைவம், வைணவத்தை குறிப்பிட்டு அமைச்சர் பேசி இருப்பது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.இது தற்போது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Who will you ally with I think we can ally with Trump Seeman