குரூப் 2 பணியிடங்களுக்கு புதிதாக வயது உச்ச வரம்பு நிர்ணயித்தது ஏன்? - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி..! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் 61 வகையான பணிகளில் மொத்தம் 2327 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அதற்கான பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது.

இதற்கான அறிவிப்பாணையில், புதிய வயது உச்ச வரம்பை தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குரூப் 2 மற்றும் 2ஏ வகை பணிகளில் இட ஒதுக்கீடு பெற்றிருக்கும் பிரினருக்கு பொதுவாக வயது வரம்பு நிர்ணயிப்பதில்லை. 

அவர்கள் 59 வயது வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றிருந்த நிலையில், தற்போது சார்பதிவாளர், நன்னடத்தை அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு புதிய வயது உச்ச வரம்பு 37 என்று அறிவிக்கப் பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப் பட்டுள்ள 2327 பணியிடங்களில் இரண்டாம் தொகுதியில் இடம் பெற்றுள்ள 13 பணிகளுக்கான 446 பணியிடங்களுக்கு இந்த புதிய வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 

இதுவரை நடந்த தேர்வுகளில் எப்போதுமே இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப் பட்டதில்லை எனும்போது தற்போது வெளியிடப் பட்டுள்ள நடப்பாண்டுக்கான தேர்வில் ஏன் புதிதாக வயது வரம்பு நிர்ணயிக்கப் பட வேண்டும்? 

இந்த முடிவை தமிழக அரசு எடுத்ததா அல்லது அதிகாரிகளே எடுத்தார்களா என்று தேர்வாணையம் விளக்கமளிப்பதோடு, இந்த வயது வரம்பையும் திரும்ப பெற வேண்டும். இது குறித்த தெளிவான அறிக்கையை தேர்வாணையம் வெளியிட வேண்டும்" என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why New Age Limit Imposed For Group 2 PMK Founder Ramadoss


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->