பருவமழையில் இருந்து சென்னை தப்பிக்குமா?.... அலட்சியம் காட்டிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்? - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் தமிழகத்தை நெருங்கி உள்ளது. குறிப்பாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை தற்போது ஒட்டியுள்ளது.

இதன் காரணமாக, நேற்று இரவு முதல் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து சென்னையில் மழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை திட்டங்கள் குறித்து விளக்கினார். அப்போது பேசிய அவர், மோட்டார் பம்புகள் எண்ணிக்கையில் தமிழில் 1499 மோட்டார் பம்புகள் என்றும், ஆங்கிலத்தில் 1194 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

இந்த நிலையில், மோட்டார் பம்புகள் எண்ணிக்கையில் துணை முதலமைச்சரின் அலட்சியமாக தகவல் தெரிவித்ததால், சமூக வலைத்தளங்களில் பலர் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Will chennai survive the monsoon deputy chief minister udayanidhi stalin who showed indifference


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->