அடுத்த முதலமைச்சரா? ஒரு தேர்தலில் கூட நிக்கவில்லை - விஜயை போட்டு வறுத்தெடுத்த திருமாவளவன் - Seithipunal
Seithipunal


விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னையில் நேற்று நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு உரையாடினார். அதில் அவர் கூறியதாவது, " இப்போது 20 சதவீதம், 24 சதவீதம் என்றெல்லாம் எழுதுகிறார்கள்.

அடுத்த முதலமைச்சர் இவர்தான் என்று ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு வழிந்து செய்தியைப் பூதாகரப்படுத்துகிறார்கள். இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை. இன்னும் வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது.

ஆனாலும் இந்தச் சமூகமும்,இந்த ஊடகமும் எத்தகைய அணுகுமுறைகளைக் கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சமூகத்தில்தான் அங்குலம் அங்குலமாகப் போராடி... போராடி... போராடி...இன்றைக்கு இந்த அங்கீகாரத்தை நாம் பெற்று இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இந்த உரையாடலில் விஜயைச் சாடிய திருமாவளவன், அவர் செய்த நன்மைகளைப் பற்றிப் பெருமையாக பேசி இருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will he next Chief Minister He didnt win single election Thirumavalavan roasted Vijay


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->