தவெக தலைவர் விஜய்க்கு எதிர்வரும் 14-ஆம் தேதி முதல் 'Y' பிரிவு பாதுக்காப்பு..! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் 14-ஆம் தேதி முதல் த.வெ.க., தலைவர் விஜய்க்கு  'Y' பிரிவு பாதுகாப்பைபாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு அளித்த 'Y' பிரிவு பாதுகாப்பை விஜய் ஏற்றுக் கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நடிகர் விஜய் த.வெ.க., என்ற கட்சியை தொடங்கி 02 வருடம் ஆரம்பித்துள்ள நிலையில், அவருக்கு தனியார் நிறுவனத்தை சேர்ந்த பவுன்சர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களுக்கு உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு, 'Y ', 'Z ' பாதுகாப்பை வழங்கி வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு கடந்த மாதம் உத்தரவிட்டு இருந்தது. 

இதன் படி, 08 முதுல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சுழற்சி முறையில் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என கூறப்படுகிறது.  ஆனால், இந்த பாதுகாப்பை விஜய் ஏற்றாரா? இல்லையா? எப்போது முதல் பாதுகாப்பு அளிக்கப்படும்? என தகவல் எதுவுமே வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், ' Y' பிரிவு பாதுகாப்பை விஜய் ஏற்றுக் கொண்டதாகவும், எதிர்வரும் 14-ஆம் தேதி முதல் அவரது பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Y category security for TVK leader Vijay from the upcoming 14th


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->