"சிங்கிளா நீங்க.? அப்போ உடனே இதை செய்யுங்க" வைரலாகும் இமோஜி.!
Are you single and you immediately switch to pear A new experiment that mixes social networking sites
சமீப காலமாகவே உலகெங்கிலும் உள்ள சிங்கிள் நபர்கள் சமூக வலைதளங்களில் தங்களது உறவு நிலையை அடையாளப்படுத்த பேரிக்காய் இமோஜியை பயன்படுத்தி வருகின்றனர். எதற்காக அவர்கள் பேரிக்காய் இமோஜியை தங்களது இன்ஸ்டாகிராமின் பயோவில் வைத்திருக்கிறார்கள் என்பதற்கான விவரத்தை பார்ப்போம்.
நீங்கள் சிங்கிளாக இருக்கிறீர்களா"? அல்லது டேட்டிங் பயன்பாடுகளால் மனமுடைந்து போயிருக்கிறீர்களா? உடனடியாக உங்கள் இன்ஸ்டாகிராம் பயோவில் பேரிக்காய் இமோஜியை வையுங்கள். இந்த வாசகம் தான் தற்போது இணைய உலகை கலக்கிக் கொண்டிருக்கிறது.
பியர் என்ற நிறுவனம் துவங்கியுள்ள இந்த சமூக பரிசோதனையின் மூலமாக தனியாக இருப்பவர்கள் தங்களது உறவு நிலையை இந்தப் பேரிக்காய் இமோஜியின் மூலம் தெரியப்படுத்துவதால் யாரிடமும் சென்று நீங்கள் சிங்கிளா என்று கேட்டு அவர்களை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டிய நிலை இருக்காது என்பதற்காகத்தான் இவ்வாறு ஒரு பரிசோதனையை ஆரம்பித்திருக்கிறது அந்த நிறுவனம்.
சமூக வலைதளங்களில் நடக்கும் இந்த புதிய பரிசோதனை டேட்டிங் உலகை தலைகீழாக மாற்றி இருக்கிறது. இது போன்ற பரிசோதனைகளின் மூலம் இனி மேட்ரிமோனி மற்றும் டேட்டிங் வெப்சைட்டுகளுக்கு பெரிய வரவேற்பு இருக்காது என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும் இந்த நிறுவனம் மேற்கொண்ட ஒரு பரிசோதனையின் மூலம் உலகெங்கிலும் இருக்கும் 1.2 பில்லியன் சிங்கிள்கள் தாங்கள் தனிமையில் இருக்கிறோம் என்பதை காட்ட விரல்களில் பச்சை நிற மோதிரங்களை அணிந்திருப்பதாகவும் அதனால் தங்களுக்கு டேட்டிங் வெப்சைட் தேவைப்படாது எனவும் தெரிவித்திருக்கின்றனர். இந்த சமூக பரிசோதனை தற்போது அமெரிக்கா ஜெர்மனி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.
English Summary
Are you single and you immediately switch to pear A new experiment that mixes social networking sites