சோஷியல் மீடியாவில் நட்பு! இளம் பெண்ணை வன்கொடுமை செய்த பிரபல யூடியூபர் முகமது நிஷால் கைது!
Kerala Youtuber Muhammad Nishal Arrested
கேரளாவில் சமூக ஊடகங்களில் நட்பு வளர்த்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 25 வயது யூடியூபர் முகமது நிஷால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கேரளா மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது நிஷால், அந்த பெண்ணுடன் இணையதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு நெருக்கமாக பழகியுள்ளார்.
பின்னர், அவரின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என மிரட்டி, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், அந்த பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கணவருக்கும் அனுப்புவதாக மிரட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, களமசேரி போலீஸார் வழக்கு பதிந்து, நேற்று மாலை யூடியூபரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர்மீது இதற்கு முன்பும் இதேபோன்ற பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நிஷாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
English Summary
Kerala Youtuber Muhammad Nishal Arrested