திருப்பதியில் 144 தடை உத்தரவு?.....ஒரு மாதத்திற்கு மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச மாநிலம், அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பொதுக் கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு உறையாற்றினார்.

அப்போது, ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு கூட தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டதாகவும்,  நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக பேசி இருந்தார்.

தொடர்ந்து திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு குறித்து தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டதில், மீன் எண்ணெய், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்புகளும் திருப்பதி லட்டில் இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்து முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, லட்டு பிரசாத விவகாரத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடப்போவதாகவும், இதற்காக ஜெகன் மோகன் ரெட்டி நாளை திருப்பதி செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கு பாஜக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும் தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் அதிகளவில் திருமலைக்கு தரிசனம் செய்ய வருகை தருவதால் பாதுகாப்பு கருதி, மாவட்டம் முழுவதும் காவல் சட்டப் பிரிவு 30-ஐ வரும் 24-ம் தேதி வரை அமல்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்பாராயுடு உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

144 prohibitory order in tirupati district administration action for a month


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->