ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு.!
300 rupees dharisanam ticket released today in tirupati temple
ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு.!
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இருப்பினும், தற்போது திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருவதால், லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது:- "டிசம்பர் 1 முதல் 20 வரை ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படஉள்ளது.
மேலும், தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்லலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
English Summary
300 rupees dharisanam ticket released today in tirupati temple