தினமும் கந்த சஷ்டி கவசம் படித்தால் என்ன நடக்கும் தெரியுமா?! ஆன்மீக அறிவு!!
benefits of kandha shashti kavasam
கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.
* வீட்டில் பீடை, தரித்திரம், செய்வினை அடியோடு அழிந்துவிடும்.
* லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்யம், மன நிம்மதி ஏற்படும்.
* கந்த ஷஷ்டி கவசம் படிக்கும் நபருக்கு புகழ், மதிப்பு கூடும்.
முக வசீகரம் ஏற்படும்.
* செவ்வாய் கிழமை மூன்று முறை கந்த ஷஷ்டியை படித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

* ஷஷ்டி தினத்தில் முருகனுக்கு விரதம் இருந்து மூன்று ஷஷ்டி கவசம் படித்து ஆலயம் சென்று முருகனுக்கு நெய் தீபம் ஏற்றினால் நடக்கவே இயலாத காரியங்களும் நடக்கும்.
* கடவுள் நம்பிக்கை இல்லை என்பவர்களுக்கு இந்த விரதம் ஓர் சவாலாக இருக்கும்.
* கந்த ஷஷ்டி கவசம் என்பது சாதரண பாடல் அல்ல சர்வ சக்திவாய்ந்த மந்திரம்.
* முற்கால முனிவர்களும் சித்தர்களும் காட்டில் வசிக்கும் போது தீய சக்திகளிடமிருந்து தப்பிக்க சிவ மந்திரங்களையும் ஷஷ்டி கவசத்தையும் ஜெபித்து வந்தனர்.

*வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது.
*எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.
English Summary
benefits of kandha shashti kavasam