தினம்தோறும் 1மணி நேரம் மட்டும் திரௌபதி அம்மன் கோவில் நடை திறக்கப்படுமாம்..!!!
Draupadi Amman Temple open only 1 hour every day
விழுப்புரத்தில் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்திலுள்ள 'திரௌபதி அம்மன் கோவில்' இன்று, சுமார் 22 மாதங்களுக்கு பிறகு பலத்த காவலர்கள் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மிகுந்த மகிழ்ச்சியுடன் பட்டியலின மக்கள் வழிபாடு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினரால் அங்கு கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பட்டியலின மக்கள் திரௌபதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து கோவில் நடை சாத்தப்பட்டது.இதில் தினந்தோறும் 1 மணிநேரம் பக்தர்களுக்காக நடை திறக்கப்படும் என்பதன் அடிப்படையில் நடை திறக்கப்பட்டு பின்னர் சாத்தப்பட்டது.
இந்த கோவில் நடைசாத்தப்பட்ட நிலையில் கோவில் முன்பு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இனியும் கோவில் முன்பு சலசலப்பு ஏற்படாதவாறு காத்து வருகின்றனர் காவலர்கள்.
English Summary
Draupadi Amman Temple open only 1 hour every day