விநாயகர் சதுர்த்தி | திருப்பரங்குன்றத்தில் விறுவிறுப்பாக தயாராகும் விநாயகர் சிலைகள்! - Seithipunal
Seithipunal


விநாயகர் சதுர்த்தி மற்றும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டம் விளாச்சேரி பகுதியில் களிமண் சிலைகள் தயாரிப்பு பணியில் கைவினைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி பகுதியில் 200-க்கும் கூடுதலான மண்பாண்ட கைவினை பொருள்கள் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். இவ்விடத்தில் மண் பாண்டங்கள் முதல் சுவாமி சிலைகள் என ஆண்டு முழுவதும் பல கைவினைப் பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. 

இவர்கள் தயாரிக்கும் அனைத்து பொருட்களும் சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத களிமண், காகிதக்கூழ்களில் உருவாக்கப்படுகின்றன. இந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி நாடு முழுக்க விநாயகர் சதுர்த்தி விழா கொண் டாடப்பட இருக்கிறது. அதன் காரணமாக முன்கூட்டியே விநாயகர் சிலைகள் கேட்டு அதிகமான ஆர்டர்கள் வந்துள்ளதால் சிலைகள் தயார் செய்யும் பணிகளில் கைவினைக் கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதைப்பற்றி மண்பாண்டக் கலைஞர் ரா.ஹரி கிருஷ்ணன் பேசியதாவது: கிருஷ்ணர் ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களிமண்ணால் ஆன சிலைகள் செய்ய பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் அதிக அளவில் ஆர்டர் கொடுத்துள்ளனர். இந்நிலையில் விநாயகர் சிலைகள், கிருஷ்ணர் சிலைகளை விரைந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தரமானதாகவும் மக்களுக்கு பிடிக்கும் விநாயகர் சிலைகளை உருவாக்க நினைக்கிறோம்.

 3 இஞ்ச் உயரம் முதல் 15 இஞ்ச் உயரத்திற்கு குறையவில்லாத சிலைகளை அச்சில் வார்த்து தயாரித்து வருகிறோம். இம்முறை அதிகமான வெயில் உணரப்படுவதால் முன்கூட்டியே சிலைகள் செய்யும் வேலையை தொடங்கியுள்ளோம் பொம்மைகளை அச்சு மூலம் செய்து 2 நாள் நிழலில் நன்றாக காய வைப்போம். அதற்கு பின்னர் சூளையில் வைத்து தரமாக சுட்டு பிரித்தெடுப்போம்.

அதற்கு ஏற்றவாறு வண்ணங்களை நளினமான முறையில் பூசி விற்பனைக்கு எடுத்து செல்வோம். காதி நிலையங்கள், பூம்புகார் விற்பனை நிலையங்கள், நவராத்திரி கொலு பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில்கள் என பல்வேறு கடை வியாபாரிகள் தொடர்ந்து ஆர்டர் கொடுத்து வருகின்றனர் இவ்வாறு அவர் கூறினார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ganesha idols being prepared briskly


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->