பிரியாணி சாப்பிடாமா சைவத்துக்கு வாங்க - மதுரை ஆதீனம்! - Seithipunal
Seithipunal


கடந்த 7-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில், இந்து மக்கள் கட்சி சார்பில்  திண்டுக்கல்லில் 14 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

பின்னர்  அந்த சிலைகள் அனைத்தும்  நேற்று திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கொண்டுவரப்பட்டதை  தொடர்ந்து, அங்கு விநாயகர் சதுர்த்தி விழா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ் மக்களே யாரும் மது குடிக்காதீர்கள் என்றும், சிகரெட் பிடிக்காதீர்கள் மற்றும் பிரியாணி சாப்பிடாதீர்கள் என்று கூறிய அவர், சைவமாக மாறுங்கள் என்று கூறினார். 

மேலும் தி.மு.க. அரசு வள்ளலார் விழாவையும், பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டையும் நடத்தியது சிறப்புக்குரியது என்று தெரிவித்த அவர், சேகர்பாபு காவி வேட்டி கட்டியதே நமக்கு வெற்றிதான் என்று தெரிவித்த அவர், முருகன் மாநாட்டின்போது, அவரிடம் நான் இரண்டு கோரிக்கைகளை வைத்திருக்கிறேன் என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் கச்சத்தீவை தாரை வார்த்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திதான் காரணம் என்றும்,  கச்சத்தீவை மீட்டால்தான் தமிழக மீனவர்களை காப்பாற்ற முடியும் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Go vegetarian without eating biryani Madurai Atheenam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->