இந்து பெண்கள் இந்து விரோத ஆட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது..கோபால்ஜி அதிரடி பேச்சு!  - Seithipunal
Seithipunal


உரிமை, வாழ்வாதாரங்கள் காக்க டாஸ்மாக் கடையை ஒழிக்க பெண்கள் போராட வேண்டும் என்றும் பெண்கள் இந்து தர்மத்தை காக்க இந்து விரோத ஆட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது என்று  சேலத்தில் நடந்த  இந்து பரிஷத்தின் மாநாட்டில் ஆர்.ஆர்.கோபால்ஜி கூறினார்.

சேலத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் சக்தி சேனா மகளிர் அமைப்பின் சேலம் மாவட்ட மாநாடு நடந்தது. இதில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் சக்தி சேனா மகளிர் அமைப்பினர் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.அப்போது இதில்  சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் மாநிலத்தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி கலந்துகொண்டு பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது:-தமிழகம் நாயன்மார்கள் வாழ்ந்த பூமி என்றும் இங்கு பிறந்ததற்கு புண்ணியம் செய்து இருக்கிறோம் என்றும்  இந்துக்களில் பல்வேறு பிரிவுகள், கடவுள் கும்பிடுவதில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என  பெருமிதம் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் பெண்களுக்கு மாதம் ரூ.1,000, இலவச பஸ் கொடுத்துவிட்டால் போதுமா? ரூ.1,000-த்தில் குடும்பம் நடத்த முடியுமா? என கேள்வி எழுப்பிய  ஆர்.ஆர்.கோபால்ஜி ஆண்கள் டாஸ்மாக் கடையில் மாதம் ரூ.10 ஆயிரம் செலவு செய்கின்றனர் என்றும்  டாஸ்மாக் கடை இல்லை என்றால் அந்த 10 ஆயிரம் பணம் மூலம் குழந்தைகளை படிக்க வைக்கமுடியும் எனவே  உரிமை, வாழ்வாதாரங்கள் காக்க டாஸ்மாக் கடையை ஒழிக்க பெண்கள் போராட வேண்டும் என ஆவேசமாக பேசினார்.

மேலும் பேசிய ஆர்.ஆர்.கோபால்ஜி இந்தியாவை இந்துக்கள் ஆட்சி செய்யவேண்டும் என்றால் இந்துக்கள் அதிகம் இருக்க வேண்டும் என்றும்  அதற்க்காக  குறைந்தது 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அப்போது தான் இதேமக்கள் தொகை நீடிக்கும் என்றும்  பெண்கள் இந்து தர்மத்தை காக்க இந்து விரோத ஆட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Hindu women should not vote for anti Hindu regimes. Gopalji in action


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->