இன்று முருகனுக்கு உகந்த ஆடி கிருத்திகை.. வழிபடுவது எப்படி.? என்னென்ன பலன்கள்.!
How to pray Aadi Kiruththikai
தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் பக்தர்கள் காவடி சுமந்து, பால்குடம் எடுத்து, அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தை கிருத்திகை, ஆடி கிருத்திகை என்ற இரு கிருத்திகைகளும் சிறப்பு வாய்ந்ததாகும் கிருத்திகை என்றால் கார்த்திகை என்ற நட்சத்திரம். தமிழ் கடவுளான முருகனின் நட்சத்திரமாகும்.
ஜோதிட அடிப்படையில் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் முருகனை வழிபடுவது மேன்மையை தரும் என கூறப்படுகிறது. கிருத்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.
ஆடி கிருத்திகை அன்று ஆண், பெண் இருவருமே வீட்டில் ஒரு பொழுது உபவாசம் அல்லது நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருப்பது வழக்கம். வீட்டில் முருகன் படத்தை அலங்கரித்து பூஜை செய்து விளக்கு ஏற்றி படையலிட்டு அந்த உணவை மட்டும் சாப்பிடும் வழக்கம் உள்ளது.
ஆடி கிருத்திகை அன்று விரதம் இருப்பது தோஷ நிவர்த்தியாக செயல்படும் என்பது நம்பிக்கை. அதேபோல் ஆடி கிருத்திகை அன்று நாள் முழுவதும் விரதம் இருந்து சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு விரதத்தை முடிக்கலாம். மேலும் முருகன் வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கும் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம்.
27 முறை கோயிலை சுற்றி வந்து மனமுருக வேண்டி வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குழந்தை இல்லாதவர்கள், வீடு நிலம் அமைய விரும்புவர்கள், நோயால் துன்பப்படுபவர்கள், தொழில் முடக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் உள்ளிட்ட பலவிதமான வேண்டுதல்களும் நிறைவேறும்.
English Summary
How to pray Aadi Kiruththikai