இன்று விநாயகர் சதுர்த்தி.. எந்த நேரத்தில் வழிபட வேண்டும்.. எப்படி வழிபட வேண்டும்.!
How to pray vinayagar chathurthi
விநாயகர் சதுர்த்தி, விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம்.
விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர்சதுர்த்தி கொண்டாட்டங்கள் களையிழந்த நிலையில்ஸஇந்தஆண்டு, வளர்ப்பிறைச துர்த்தி தினமானஸஷஇன்று, உற்சாகமாக கொண்டாடப்பட்டுவருகிறது.
நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. பொது இடங்களில் பல்வேறு வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. வீடுகளிலும் பல வடிவங்களில் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுவாக எந்த ஒரு சுபகாரியத்தை தொடங்குவதற்கு முன்வினை தீர்க்கும் விநாயகரை வழிபட்டுதான் தொடங்கவேண்டும் என்பது இந்து மதத்தின் நம்பிக்கை. அதன்படி, இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்திநாளின் பிள்ளையாரை வழிபடுவதற்கான சுபமுகூர்த்தநேரம் இன்று காலை 11.04 மணி முதல் மதியம் 01.37 வரை.
இந்த சதுர்த்தி நாளில் விநாயகப்பெருமானை வேண்டிவிரதம் இருக்க உகந்தநாள். இந்த நாளில், கேட்டவரத்தை விநாயகர் அள்ளிகொடுப்பார் என்பது காலம்காலமாக இந்து மக்களின் நம்பிக்கை.
English Summary
How to pray vinayagar chathurthi