முருகப்பெருமானை வழிபடும் முறை! வாங்க பார்க்கலாம்...
Lord Murugan pray tips
தெய்வங்களுக்கு இருக்க வேண்டிய விரதங்கள் என்பது பலவிதமாக உள்ளது. அது போல் முருகப்பெருமானுக்கு மூன்று விதமாக விரதங்கள் இருக்கலாம். நட்சத்திர விரதம், சஷ்டி விரதம், செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது.
ஒரு மாதத்திற்கு வளர்பிறை தேய்பிறை என சஷ்டி திதிகள் வருகிறது. தேய்பிறை சஷ்டியில் வீட்டில் இருக்கும்.
பிரச்சினைகள் தீர, நோய் நொடிகள் எல்லாம் தீர்ந்து வளர்பிறை சஷ்டியில் வாழ்க்கை முன்னேற வேண்டும். திருமண யோகம், குழந்தை யோகம் போன்றவற்றிற்காக விரதம் இருக்கலாம்.
ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய கந்த சஷ்டி விரதம் 7 நாட்கள் இருக்க கூடிய விரதம். இதனால் அந்த விரதம் மிகவும் சிறப்பானது. அனைத்து விரதங்களையும் முடித்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை என்றால் முருகப்பெருமானை 48 நாட்கள் வேண்டி விரதம் இருக்கலாம்.
9 கிரகங்கள் 12 ராசிகள் 12 நட்சத்திரங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது 48 நாட்கள் விரதம். கிரகங்களையும் ராசிகளையும் நட்சத்திரங்களையும் உள்ளடக்கிய தெய்வம் முருகப்பெருமான்.
48 நாள் விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது. இந்த விரதத்தால் உடலும் மனமும் சீராகி வாழ்க்கையில் நல்லது நடக்கும். குழந்தை வரம் வேண்டி விரதம் இருப்பவர்கள் 48 நாட்கள் விரதம் இருக்கலாம்.
அவ்வாறு விரதம் இருப்பது குழந்தை பிறப்பதற்கு உங்கள் உடலையும் மனதையும் தயார் படுத்திக் கொள்வதற்கான கால அளவு தான்.
48 நாட்கள் விரதம் இருக்கும் பொழுது தினமும் காலையில் சீக்கிரமாக எழுந்து குளித்துவிட்டு நெற்றியில் திருநீர் அணிய வேண்டும்.
சிவப்பு நிற மலர்கள் போட்டு நெய்வேத்தியத்திற்காக பழம் அல்லது ஏதாவது ஒரு இனிப்பு வைத்து வழிபடலாம். எதுவும் இல்லை என்றால் ஒரு டம்ளர் பாலில் தேன் கலந்து வைத்து முருக பெருமானுக்கு தேனும் திணைமாவும் படைத்து மனதார வழிபடலாம்.
காலையில் தினமும் பூஜை செய்யும் பொழுது கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும். உங்களுக்கு எந்த பிரச்சனைகள் இருக்கிறதோ அதை தெரிவித்து தீர வேண்டும் என முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
இது இந்த விரதத்தை கடைபிடித்தால் நிச்சயமாக முருகப்பெருமான் அருள் புரிவார். நீங்கள் வேண்டியது நல்லபடியாக நிறைவேறும். முழு மனதுடன் இந்த செய்யலாம்.