இனி அர்ச்சகர்களின் தட்டில் விழும் காணிக்கையும் அறநிலைத்துறைக்கே - அதிரடி உத்தரவு!
Madurai murugan Temple Archakar Kanikkai Undiyal issue
மதுரை மாநகர் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அர்ச்சகர்கள் தட்டில் பக்தர்களால் போடப்படும் காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என்றும், மீறினால் அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருப்பது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் திருக்கோயில் செயல் அலுவலர் விடுத்துள்ள அந்த அறிவிப்பில், "மதுரை நகர், நேதாஜி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டயுதபாணி சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்களால் போடப்படும் காணிக்கையினை உண்டியலில் செலுத்த உத்திரவிடப்படுகிறது.
இவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் வரப்பெறும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினை திருக்கோயில் மணியம் மற்றும் காவலர்கள் கவனித்தல் வேண்டும்.
தட்டு காணிக்கை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இருசிலர் ஆதரவும் தெரிவித்த வருகின்றனர்.
English Summary
Madurai murugan Temple Archakar Kanikkai Undiyal issue