நீண்ட ஆயுளை பெற.. மறவாமல் சனிக்கிழமையில் இதை செய்யுங்கள்.!
sanikizhamai neenda ayulai pera enna vazhi
சனிக்கிழமை விரதம்:
கடவுளுக்கு விரதம் இருப்பது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக தான். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானதும், அவசியமானதும் ஆகும். இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம்.
சனிக்கிழமை பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் விசேஷமான கிழமையாக இருந்து வருகிறது. சனிக்கிழமையில் இவர்களை வழிபடுபவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வழிபடும் முறைகள் :
சனிக்கிழமையில் சனிபகவானின் அருள் பெற வடிக்கும் சாதத்தில் சிறிதளவு தயிர் மற்றும் கருப்பு எள் சேர்த்து உருண்டைகளாக உருட்டி காகத்திற்கு வைத்துவிட்டு சாப்பிடுவது சனி தோஷத்தை நீக்கி அதன் பாதிப்புகளை குறைத்து நன்மைகளை கொடுக்கும்.
சனிக்கிழமையில் ஒரு கருப்பு துணியை சதுரமாக வெட்டி, அதில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் சிறிதளவு கல்லுப்பு போட்டு, கருப்பு நூல் கொண்டு இறுக்கமாக முடிந்து கொள்ளுங்கள். கிழக்கு பார்த்து நின்று கொண்டு உங்கள் தலையை 7 முறை திருஷ்டி கழியுங்கள்.
இந்த பரிகாரத்தை சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் செய்யலாம். தலையை 7 முறை சுற்றி எடுத்து பின்னர் இதனை ஏதாவதொரு அரச மரத்தடியில் போட்டு விடவும்.
இதை தொடர்ந்து 21 சனிக்கிழமைகளில் செய்துவர உங்களுக்கு இருந்த கஷ்டங்கள், துரதிர்ஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். வெற்றி வாய்ப்புகள், அதிர்ஷ்டங்கள் தேடி வரும்.
சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று மூலவருக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வரலாம். துளசியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே நாராயணருக்கு மகாலட்சுமியை கொடுத்து வணங்கி வருவதால் நம்முடைய வாழ்வு வறுமையின்றி செழிக்கும் என்பது நம்பிக்கை.
சனிக்கிழமை விரதத்தை எல்லா மாதங்களிலும் கடைபிடிக்கலாம்.
பலன்கள் :
சனிபகவானானவர் ஆயுள் தரும் ஆயுள்காரகனாக இருக்கிறார். எனவே சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனீஸ்வரனின் அருள் பெற்று நீண்ட நாட்கள் வாழும் ஆயுளை பெறுகிறார்கள்.
தொழில், வியாபாரங்களில் நிலையான வருமானமும், தொழிலில் விருத்தியும் உண்டாகும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் மேற்கொள்ள ஆரோக்கியம், ஆயுள், செல்வம் பெருகி மகிழ்ச்சியான வாழ்வை பெறலாம்.
English Summary
sanikizhamai neenda ayulai pera enna vazhi