சனிக்கிழமை மறந்தும் கூட..இந்த பொருட்களை எல்லாம் வாங்கி விடாதீர்கள்.? - Seithipunal
Seithipunal


நவகிரகங்களில் மற்ற கிரகங்களை காட்டிலும் சனிபகவான் என்றால் அனைவரும் பயப்படுவார்கள். அதுமட்டுமின்றி மற்ற கிரகப்பெயர்ச்சி போல் இல்லாமல் நீண்ட காலம் ஒரே ராசியில் அமர்ந்து சுப மற்றும் அசுப பலன்களை தரக்கூடியவராக சனி இருப்பதால் சனிபகவானின் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

அதன்படி நிறைய விஷயங்கள் இந்த கிழமைகளில், இந்த நாட்களில் செய்ய வேண்டும். இந்த சமயத்தில் செய்யக்கூடாது என இருக்கிறது. அந்த வகையில் சனிக்கிழமையன்று எந்தெந்த பொருட்களையெல்லாம் வாங்கக்கூடாது என்பதை பற்றி பார்க்கலாம்.

வாங்கக்கூடாத பொருட்கள் என்னென்ன.?

சனிக்கிழமையன்று உப்பு வாங்கவே கூடாது. அவ்வாறு வாங்கினால் வியாபாரத்தில் நஷ்டம், பண விரயம் உண்டாகும். மேலும் அடிக்கடி நோய்வாய்ப்படவும் நேரிடும்.

வீடு பெருக்கப் பயன்படும் துடைப்பத்தை சனிக்கிழமை வாங்குவது நல்லதல்ல.

கத்திரிக்கோலை சனிக்கிழமையன்று வாங்குவது உகந்ததல்ல. இதனால் மோசமான சூழ்நிலையில் இருப்பவர்கள் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

அரிசி மாவு, கோதுமை மாவு போன்ற மாவுப்பொருட்களையும் சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாது. இவைகள் மோசமான உடல்நிலையை குறிப்பதாகும்.

எள்ளை சனிக்கிழமையில் வாங்கக்கூடாது. இதனால் முடிக்க வேண்டிய காரியம் முடியாமல் தள்ளிப் போகும் அல்லது தடைபடும்.

இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமை வாங்கக்கூடாது. ஏனென்றால் இரும்பு பொருட்கள் சனிபகவானுக்கு ஆகாததால் அன்று வாங்கினால் துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும். அதேசமயம் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமையன்று தானமாக கொடுத்தால் மிகவும் நல்லது.

சனிக்கிழமையன்று எண்ணெய் வாங்கக்கூடாது. அவ்வாறு வாங்கினால் அடிக்கடி உடல் நலக்குறைவு உண்டாகும். ஆனால் எண்ணெயை தானமாக கொடுக்கலாம். அதுவும் கடுகு எண்ணெயில் செய்த அல்வா, நல்லெண்ணெயை தானம் செய்தால் மிகவும் சிறந்ததாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saturday some things not buy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->