விருட்ச சாஸ்திரம் : மந்தாரை மரம் வீட்டில் வளர்க்கலாமா? - Seithipunal
Seithipunal


மந்தாரை மரம் வீட்டில் வளர்க்கலாமா?

மலையாத்தி அல்லது மந்தாரை  பேபியேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது தென்கிழக்காசியா, தென் சீனாவிலிருந்து மேற்கே இந்தியா வரையான பகுதிகளை தாயகமாகக் கொண்டது. 

திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம் இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகிவிட்டது. சிருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி, மந்தாரை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

சிறியது முதல் நடுத்தரம் வரை உயரமான இம்மரம் 10-12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. கோடையில் இலைகளை உதிர்த்து விடுகின்றது. இதன் இலைகள் அடியும், நுனியும் இரண்டாகப் பிளவுபட்டு வளைந்த வடிவை உடையதாகக் காணப்படும். 

வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் ஐந்து இதழ்களைக் கொண்ட கவர்ச்சியான இதன் பூக்கள், 8-12 ச.மீ விட்டம் கொண்டவை. 15-30 ச.மீ வரை நீளம் கொண்ட இதன் பழங்கள் பல விதைகளை உள்ளடக்கியவை.

இது வெப்பவலயப் பகுதிகளில் மிகவும் விரும்பி வளர்க்கப்படுகின்ற அலங்காரத் தாவரங்களில் ஒன்றாகும். சிறப்பாக இதன் வாசனை உள்ள பூக்களுக்காக இவை விரும்பப்படுகின்றது.

உடலுக்கு நலம் தரும் திருவாச்சி மரம், வயிறு தொடர்பான அனைத்து பாதிப்புகளுக்கும் நிவாரணம் தரும், கை கால் வலிகளைப் போக்கும் தன்மை மிக்கது, உணவை உண்ணப் பயன்படும் வாழை இலைகளைப்போல திருவாச்சி இலைகள் பயன் தந்து, மனிதர்களின் உடல் மன வியாதிகளைப் போக்கும் இயல்புடையது. 

 'மந்தாரை உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது" என்று ஒரு மருத்துவப் பழமொழியே உண்டு. அந்த அளவுக்கு மருத்துவகுணங்களை கொண்டுள்ளது மந்தாரை. 

இலைகளில் குவார் செட்டின், அஸ்ட்ரா காஸின், ஐசோகுவர்சிட்ரின், காம்ப்ஃபெரால் க்னூக்கோசைடு, அமினோ அமிலங்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் விதைகளில் உள்ளன. ஆந்தோசையனின், நட்டின், அப்பிஜெனின், போன்ற வேதிப்பொருட்களும் தாவரத்தில் உள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் மந்தாரை மரமும், நடுவில் அலரிச் செடிகளும் நடப்பட்டு இருப்பதைக் காணலாம். இதற்குக் காரணம் சூரிய வெப்பத்தை தார் ரோடு உறிஞ்சிக் கொள்ளும் போது, அலரிச் செடியும், மந்தாரைச் செடியும் அதைக் குளிர்ச்சியாக மாற்றி காற்றில் பரப்பி விடுகிறது என்று நிரூபணமாகியிருக்கிறது.

மந்தாரை மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?

வீட்டில் மந்தாரை மரங்களை வளர்த்தால் முன்னோர்கள் ஆசி கிடைப்பதோடு குழந்தைகள் படிப்பு நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் ஏற்படும், வியாபாரம் பெருகும். 

மந்தாரை மரத்தை வீட்டின் எந்த திசையில் வளர்க்கலாம்?

தெற்கு, மேற்கு பகுதிகளில் மந்தாரை மரத்தை வளர்க்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Which side plant mantharai tree


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->