வாழைப்பழத்தை மட்டும் பிரசாதமாக வைப்பதன் காரணம் என்ன?! - Seithipunal
Seithipunal


சில வியப்பூட்டும் தகவல்கள்:

வாழைப்பழத்தை மட்டும் பிரசாதமாக வைப்பதன் காரணம் என்ன?

கடவுளிடம் மறுபிறவி எடுக்காமல் மோட்சம் அடைய வேண்டும் என்று எண்ணற்ற மக்கள் வேண்டி கொள்வார்கள். அதை கடவுளுக்கு உணர்த்தும் விதமாகத்தான் வாழைப்பழத்தை வைக்கிறார்கள். வாழைப்பழத்தின் கொட்டைகளை எடுத்து மீண்டும் முளைக்க வைக்க முடியாது. அதன் கட்டைகளை கொண்டே நடவு செய்து வளர்க்க முடியும். ஆனால் மற்ற மரங்கள் அல்லது செடிகளின் விதைகளை கொண்டு மீண்டும் மீண்டும் உருவாக்கலாம். அதற்காகத்தான் வாழைப்பழத்தை மக்கள் கடவுளுக்கு வைத்து படைக்கிறார்கள்.

கல்லுக்குள் தேரை எப்படி வருகிறது? அதற்கு உணவு எவ்வாறு கிடைக்கிறது?

'கல்லுக்குள் தேரை" என்பது பழக்கமான சொற்றொடர் எனலாம், கல்லிடைத் தேரை என்பதுதான் சரியான சொற்றொடர் ஆகும். தவளையைப் போன்ற தேரையும் இருவாழ்வி வகையைச் சார்ந்தது. தேரை ஒரு குளிர் ரத்தப் பிராணி ஆகும். இனப்பெருக்க காலமான மழைக்காலத்தில்தான் வெளிப்படும். மற்ற காலங்களில் பூமிக்கடியில் ஈரமான சூழ்நிலையில் எல்லாவிதமான செயல்களையும் முடக்கி ஒருவித உறக்க நிலையில் இருக்கும்.

அப்போது, குறைந்தபட்ச சுவாசம் தோல் மூலம் நடைபெறும். பொதுவாக தேரைகள், பூமிக்கடியில் உள்ள பொந்துகளிலும், கற்களுக்கு இடையேயும் உறக்க நிலையை மேற்கொள்ளும்.

எப்போதாவது கற்களைப் புரட்டும்போதும் அல்லது கற்களை உடைக்கும்போதும் இந்த உறக்க நிலையிலுள்ள தேரைகள் வெளிப்படும். அதனால்தான் 'கல்லுக்குள் தேரை" என்ற சொற்றொடர் உருவாகி இருக்கிறது. 'கல்லிடைத் தேரை" என்பதுதான் சரியான பயன்பாடு.

தேரை இவ்விதம் உறக்க நிலையில் இருக்கும்போது தன் தசைகளில், கல்லீரலில் சேமித்து வைத்துள்ள (கிளைக்கோஜன்) உணவுப் பொருளை ஆற்றல் உற்பத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why banana is only for god


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->