2024 டி20 உலகக்கோப்பை எங்கு நடைபெறுகிறது தெரியுமா?.. நேரடியாக தகுதிப்பெற்ற 12 அணிகள் எவை.?
2024 T20 World Cup qualified teams
ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சூப்பர் 12 சுற்று போட்டிகளும் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் மட்டுமே உள்ளது.
இந்த நிலையில் குரூப்-1 பிரிவு புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் அடுத்த டி20 உலகக்கோப்பை 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 55 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2024 உலககோப்பை தொடருக்கு நேரடியாக இதுவரை 12 அணிகள் நேரடியாக முன்னேறியுள்ளன.
அந்த வகையில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
மேலும், இந்த உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் 2 குரூப்பிலும் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. அதன்படி, குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, அணிகளும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகளும் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
மேலும், ஐசிசி தரவரிசை அடிப்படையில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
இதனையடுத்து ஆப்பிரிக்கா தகுதி சுற்றில் 2 அணிகள், அமெரிக்க தகுதி சுற்றில் 1 அணி, ஆசிய தகுதி சுற்றில் 2 அணிகள், கிழக்கு ஆசிய பசிபிக் தகுதி சுற்றில் 1 அணி, ஐரோப்பிய தகுதி சுற்றில் 2 அணிகள் என மொத்தம் 8 அணிகளும் இதில் பங்கேற்க உள்ளன.
2024 டி20 உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள அணிகள்
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, வங்காளதேசம், நியூசிலாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்.
English Summary
2024 T20 World Cup qualified teams