2வது ஒரு நாள் போட்டி.. இந்திய அணியில் முக்கிய வீரர் மாற்றம்.? - Seithipunal
Seithipunal


தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் 31 வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில், இந்தியா-தென்னாபிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றால்தான் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றி தென்னாப்பிரிக்கா, ஒருநாள் தொடரை வெல்ல வேண்டும் முனைப்பில் விளையாடி வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் கிடைத்த வெற்றி, அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கை அளித்துள்ளது. 

எனினும் தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும், உத்வேகத்துடன் இந்திய அணி இன்று நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது. முதல் போட்டியில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு, இன்றைய ஆட்டத்தில் இந்தியா சிறப்பாக விளையாடும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

இந்திய அணியின் உத்தேச பட்டியல் :

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் அய்யர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாகூர் அல்லது ஜெயந்த் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2nd odi indian team may be change


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->