ஆப்கான் வீரர் நவீன் உல் ஹக் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் நடப்பு உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற நிலையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய பணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இதில் இந்திய அணி மட்டுமே எளிதாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. மற்ற அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தில் வெளிப்படுத்தியது என்ற கூறலாம்.

ஆப்கானிஸ்தான் அணி 9 போட்டிகளில் 4 வெற்றிகள், 5 தோல்வியுடன் அரையிறுதி வாய்ப்பை நூலிழையில் நழுவ விட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தால் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கும்.

மேக்ஸ்வெல்லின் அபாரமான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு தகர்ந்து போனது. ஆனாலும் இந்த தொடரில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நடப்பு உலக கோப்பை தொடரில் அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 24 வயதாகும் நவீன் உல் ஹக் ஆப்கானிஸ்தான் அணிக்காக 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 22 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதே நேரத்தில் 20 ஓவர் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக தொடர்ந்து விளையாட போவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan player Naveen ul Haq retires from odi cricket


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->