இசைமழையில் நனைய தயாரா...!!! சென்னை -மும்பை போட்டிக்கு முன்பாக அனிருத்தின் இசை தெறிக்க விடப் போகிறது...!!!
Anirudhs music going splashed before Chennai Mumbai match
இந்தியாவில் T 20 கிரிக்கெட் தொடரான IPL -ன் 18-வது சீசன் நாளை தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ்,ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளன.

இது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதைத்தொடர்ந்து 23-ந் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சென்னை - மும்பை போட்டிக்கு முன்பாக நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது .
இதனால் அனிருத் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
English Summary
Anirudhs music going splashed before Chennai Mumbai match